Archives: பிப்ரவரி 2023

banner image

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். 1 யோவான் 3:16

ஒரு கோடைக்கால ஆய்வு நிகழ்ச்சியின் போது, சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்பைன் மலையில் ஏற விரும்பிய ஒரு சிறுவனைப் பற்றிய புத்தகத்தை என் மகன் படித்தான். இந்த இலக்குக்கான பயிற்சியே அவனது பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமித்தது. இறுதியாக அவன் மலையேறப் புறப்பட்டபோது, திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை. மலை சாய்வின் மேலே, அவனது ஒருவர் அணி வீரர் நோய்வாய்ப்பட்டார். சிறுவன் தனது இலக்கை அடைவதற்குப் பதிலாக, அவருக்கு உதவி செய்ய அவருடன் தங்க…

banner image

ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். கலாத்தியர் 4:22

கலாத்தியர்களின் இந்த அத்தியாயத்தில் பவுல் பாவத்தைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் ஆவிக்குரியதற்கும், ஜென்ம சுபாவத்திற்குமிடையே உள்ள உறவைப் பற்றிப் பேசுகிறார். தியாகத்தின் மூலம்தான் ஜென்ம சுபாவத்தை ஆவிக்குரியதாக மாற்ற முடியும். இது இல்லாமல் ஒரு நபர் பிளவுபட்ட வாழ்க்கையை நடத்துவார். ஜென்ம சுபாவத்தைப் பலியிட வேண்டும் என்று தேவன் ஏன் கோரினார்? தேவன் அதைக் கோரவில்லை. இது தேவனின் பரிபூரண சித்தம் அல்ல, மாறாக அவருடைய…

banner image

மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். 2 கொரிந்தியர் 12:15

ஒருதரம், "பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்" (ரோமர் 5:5); பிறரின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் ஆர்வங்கள் மற்றும் நோக்கங்களுடன் நாம் வெளிப்படையாகவே நாம் ஒன்றுவதைக் காணத் தொடங்குகிறோம். மேலும் இயேசு ஒவ்வொரு தனி நபர் மீதும் அக்கறை கொண்டுள்ளார். நம்முடைய சொந்த நலன்கள் மற்றும் விருப்பங்களால் வழிநடத்தப்படுவதற்குக் கிறிஸ்தவ சேவையில் நமக்கு உரிமை இல்லை. உண்மையில், இது இயேசு கிறிஸ்துவுடனான நமது உறவின் மிகப்பெரிய சோதனைகளில்…

banner image

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும் (வ.16). எபேசியர் 3:14-21

கோடீஸ்வர நிறுவனர்களான பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரால் 2009 இல் உருவாக்கப்பட்ட "தி கிவிங் ப்லெட்ஜ்", உலகின் பெரும் செல்வந்தர்கள் தங்கள் பணத்தில் பெரும்பகுதியை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுமாறு ஊக்குவிக்கும் ஒரு செயல்திட்டமாகும். பஃபெட், தானே தலைமை தாங்குகிறார். மேலும் அவர் இறக்கும் நேரத்தில் தனது செல்வத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார். இது நம்பமுடியாத தாராளமான செயல்! ஆனால் அவரது தற்போதைய சொத்து மதிப்பு 72.3…

banner image

அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும். யாத்திராகமம் 32:21-32

எகிப்து சிறையில் 400 நாட்களைக் கழித்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் விடுதலையானபோது பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். தனது விடுதலைக்கான நிம்மதியை ஒப்புக்கொண்டாலும், தான் பிரிந்து செல்லும் நண்பர்களும் இன்னும் எவ்வளவு காலம் சிறையிலிருப்பார்களென்று தெரியாததால் அவர்களுக்காக ஆழ்ந்த கவலையுடன்தான் தனது சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். தன்னுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சக நிருபர்களிடமிருந்து விடைபெறுவது மிகவும் கடினமாக இருப்பதாக அவர் கூறினார்.

நண்பர்களை விட்டுச் செல்வதை நினைத்து…

banner image

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம். கலாத்தியர் 5:22-23

பிப்ரவரி 2020 இல், கோவிட்-19 நெருக்கடி துவங்கிய காலம். ஒரு செய்தித்தாள் கட்டுரையாளரின் கரிசனை என் கவனத்தை ஈர்த்தது. "நாம் விருப்பத்துடன் தனிமைப்படுத்திக் கொள்வோமா? மற்றவர்கள் நோய்வாய்ப்படாமல் இருக்க நமது வேலை, பயணம் மற்றும் கடையில் வாங்கும் பழக்கங்களை மாற்றிக் கொள்வோமா?" என்று வியந்தார். மேலும் "இது வெறும் மருத்துவம் சார்ந்த சோதனை மட்டுமல்ல, மற்றவர்களுக்காக நம்மை இழக்கும் நமது விருப்பத்திற்குமான சோதனையும்தான்" என்று அவர் எழுதினார். திடீரென்று…

banner image

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக; அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 1:3-4

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு புதுமையான ஆங்கிலப் பத்திரிகையாளரான டபிள்யூ.டி. ஸ்டெட், சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதில் பேர்பெற்றவர். அவர் வெளியிட்ட இரண்டு கட்டுரைகள், பயணிகளுக்கான உயிர்காக்கும் படகுகள் போதிய விகிதத்திலின்றி கப்பல்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்தை எடுத்துரைத்தது. அதற்கேற்றாற்போல், ஏப்ரல் 15, 1912 இல் வடக்கு…

தியாகம்

அறிமுகம்

தியாகம் என்பது கிறிஸ்தவத்தின் மையக் கருப்பொருளாகும், இது இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த இறுதி தியாகத்தில் வேரூன்றியுள்ளது. வரலாறு முழுவதும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களில் இது குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நம்முடைய சொந்த வாழ்க்கையில் தியாகங்களைச் செய்ய அழைக்கப்படுகிறோம். ஊழியங்களின் வாயில் மற்றவர்களுக்காக நம்முடைய சொந்த விருப்பங்களை விட்டுக்கொடுக்கவும், அல்லது நம் விசுவாசத்திற்காக உபத்திரவப்படவும் கூட அழைக்கப்படுகிறோம்.

தனிநபர் முக்கியத்துவத்தையும், சுய திருப்தியையும் எப்போதும் மதிக்கும் இவ்வுலகில் தியாகம் என்ற கருத்தைப் புரிந்துகொள்வது கடினம். இருப்பினும் கிறிஸ்தவர்களாகிய நாம்,…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஆவிக்குரிய ஏற்ற தகுதி

நிர்மல், உடற்பயிற்சி கூடத்தில் தவறாமல் பயிற்சி செய்வான். அது அவன் உடலில் வெளிப்படையாகத் தெரியும். அவனுடைய அகன்ற தோள்கள், புடைத்த தசைகள், மேலும் அவனது மேற்கைச் சுற்றளவு என் தொடைகளின் அளவாக இருக்கும். அவனது இந்த கட்டழகே, அவனோடு தேவனைக் குறித்துப் பேச, என்னைத் தூண்டியது. உடல் தகுதிக்கான அவனது அதே அர்ப்பணிப்பு, தேவனுடனான ஆரோக்கியமான உறவிலும் வெளிப்படுகிறதா என்று நான் அவனிடம் கேட்டேன். நாங்கள் மிகவும் ஆழமாகப் பேசவில்லை என்றாலும், நிர்மல் "தன் வாழ்க்கையில் தேவன் இருப்பதை" ஒப்புக்கொண்டார். நானூறு பவுண்டு எடையுள்ள, பொருத்தமற்ற, ஆரோக்கியமற்ற உருவத்திலிருந்த அவனது பழைய புகைப்படத்தை என்னிடம் காண்பிக்கும் அளவுக்கு நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். அவனது வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றம், உடல் ரீதியாக ஆச்சரியமானவற்றைச் செய்திருந்தது.

1 தீமோத்தேயு 4:6-10 இல், உடல் மற்றும் ஆவிக்குரிய பயிற்சி மீது நம் கவனத்தை திரும்புகிறது. “தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது" (வ. 7-8). ஒருவருடைய வெளிப்புறத் தகுதி, தேவனுடனான நமது நிலையை மாற்றாது. நமது ஆவிக்குரிய தகுதி, உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம். இது இயேசுவை நம்புவதற்கான தீர்மானத்தோடு தொடங்குகிறது, அவர் மூலமே நாம் மன்னிப்பைப் பெறுகிறோம். அந்த புள்ளியிலிருந்தே, தேவபக்தியான வாழ்க்கைக்கான பயிற்சி தொடங்குகிறது. இதில், “விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும்..  நற்போதகத்திலும்” (வ. 6) தேறி வருதல் மற்றும் தேவனுடைய பெலத்தால், நம் பரலோகத் தகப்பனைக் கனம் பண்ணுகிற வாழ்க்கையை வாழ்தல் ஆகியன அடங்கும்.

உதவியை வழங்குதல்

வீடு தேடி உணவு வழங்கும் தனது வேலையினிமித்தம் சுவாதி, சுதாகரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, ​​உணவுப் பையிலிருந்த முடிச்சை அவிழ்க்க அவருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். சுதாகர் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், ஆகவே முடிச்சை அவிழ்க்கும் திறன் அவரிடம்  இல்லை. சுவாதி மகிழ்ச்சியுடன் கடமையைச் செய்தாள். சுவாதி அந்த நாள் முழுவதும் சுதாகரை பற்றி அடிக்கடி நினைவு கொண்டாள், மேலும் அவருக்குத் தேவையான சில அத்தியாவசியங்களைச் சேகரிக்க அவள் தூண்டப்பட்டாள். ஊக்கமளிக்கும் குறிப்புடன் சுவாதி, தனது வீட்டு வாசலில் விட்டுச் சென்ற சூடான தேநீரையும்…

ஜீவனைத் தெரிந்துகொள்ளுதல்

சந்துரு, கிறிஸ்துவை நம்பும் குடும்பத்தில் தான் வளர்ந்தான். ஆனால், கல்லூரி மாணவராகக் குடிப்பழக்கம் மற்றும் கேளிக்கை போன்றவற்றால் தனது சிறுபிராய நம்பிக்கையிலிருந்து வழிதவற ஆரம்பித்தான். பின்னர், " தகுதியற்றிருந்த என்னை, தேவன் மீண்டும் தன்னிடம் சேர்த்துக் கொண்டார்" என்றான். காலப்போக்கில், சந்துரு ஒரு கோடைக்காலத்தில்  முக்கிய நகரங்களின் தெருக்களில் அறிமுகமற்றவர்களோடு இயேசுவைப் பகிர்ந்துகொண்டான். தற்போது, அவனுடைய சபையில் வாலிபர் ஊழியத்தைக் குறித்த பயிற்சி படிப்பை முடித்தான். கிறிஸ்துவுக்காக வாழாமல் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க இளைஞர்களுக்கு உதவுவதே சந்துருவின் குறிக்கோள்.

சந்துருவைப் போலவே, இஸ்ரவேலின் தலைவரான மோசேக்கும் அடுத்த தலைமுறை குறித்த கரிசனை இருந்தது. தான் விரைவில் தலைமையைத் அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்த மோசே, தேவனின் நல்ல ஒழுங்குமுறைகளை ஜனங்களுக்கு வழங்கினார். பின்னர் கீழ்ப்படிதல் அல்லது கீழ்ப்படியாமையின் பலன்களையும் பட்டியலிட்டார். கீழ்ப்படிதலுக்கு,  ஆசீர்வாதம் மற்றும் ஜீவன்; கீழ்ப்படியாமைக்கு, சாபம் மற்றும் மரணம். அவர் அவர்களிடம், "ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு" என்றார். "அவரே உனக்கு ஜீவனும்" (உபாகமம் 30:19-20) என்றார். தேவனை நேசிக்கவும், "அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக" (வ. 20) என்றும் அவர்களை மோசே வலியுறுத்தினார். 

பாவத்தைத் தேர்ந்தெடுப்பது பின்விளைவுகளை உண்டாக்கும். ஆனால் நாம் நம் வாழ்க்கையை மீண்டும் தேவனிடம் ஒப்படைக்கும்போது, ​​அவர் நிச்சயமாக இரக்கம் காட்டுவார் (வ. 2-3) மற்றும் நம்மை மீட்டெடுப்பார் (வ. 4). இந்த வாக்குத்தத்தம் இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரம் முழுவதும் நிறைவேற்றப்பட்டது, ஆனால் இயேசு சிலுவையில் செய்த இறுதியான கிரியை மூலம் நம்மையும் தேவனோடு ஐக்கியப்படுத்தியது. நமக்கும் இன்று நமக்கு முன் இந்த தெரிவுதெடுப்பு வைக்கப்பட்டுள்ளது, ஜீவனைத் தேர்ந்தெடுக்க நமக்கு சுதந்தரம் கொடுக்கப்பட்டுள்ளது.